Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த தொழிலில் வருமானம் இல்ல... ஆபாச உலகில் நுழைந்ததும் பணம் கொட்டுது - ஓப்பனாக கூறிய பிரபலம்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (16:31 IST)
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுக்க உள்ள பலதரப்பு மக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், வருமான ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பெரிய பணக்காரர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்றே கண்ணிக்கமுடியாமல் அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர்  திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏன்? எதற்காக என்று குழம்பிப்போன அனைவருக்கும் விளக்கமளித்துள்ள ரெனீ கிரேசி, " நான் இந்த துறையில் நுழைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள்  நிறைய பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த இரண்டு மாத முடிவில் நான் சம்பாதித்த பணம் ஆறு இலக்கங்களை தொட்டுவிடும். இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது எனக்கு பிடித்திருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பணம் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

ஆனால்,  மக்கள் பலரும் என்னைப் பற்றி தவறாக பேசுவதை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் இந்த வருமான பிரச்னையில் இருந்த மீள எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், என் கனவு சுக்கு நூறாகிவிட்டது. இதையெல்லாம் தாண்டி நான் கனவில் கூட நினைத்திராத அளவிற்கு என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. யார் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. தற்போது நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments