Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கேன்ஸ்'' திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு....''ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்'' - மத்திய அமைச்சர் எல். முருகன்

Webdunia
புதன், 17 மே 2023 (18:09 IST)
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய   மத்திய அமைச்சர் எல். முருகன் ‘ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக’ டுவீட் பதிவிட்டுள்ளார்.
 

பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா  நடைபெறும். இந்த ஆண்டு 76 வது கேன்ஸ் திரைப்பட விழா   நேற்று தொடங்கியது.

இந்த விழா வரும் 27 ஆம் தேதி வரை  என மொத்தம் 12 நாட்கள் இன்டஹ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், இந்தி0ய சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா அலி கான், மனுஷி சில்லார் உள்ளிட்ட  இந்தியா சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன்  கலந்துகொண்டுள்ளார். அவர் சிவப்பு கம்பளத்தில்  நடந்து சென்றார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments