Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! தப்பி ஓடிய அதிபர்? - சிரியாவில் அதிர்ச்சி!

Prasanth Karthick
ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (09:24 IST)

சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு கலகம் நடந்து வரும் நிலையில் தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த 2011ம் ஆண்டில் அதிபர் அசாத்திற்கு எதிராக டெரா பிராந்தியத்தில் கிளர்ச்சி உண்டானது. அது மேலும் பல பிராந்தியங்களுக்கும் பரவிய நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு உருவானது.

 

இந்த கிளர்ச்சி குழுவுக்கும், சிரியா அரசுக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் ஏராளமான சிரிய மக்கள் அகதிகளாக பல்வேறு உலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

 

இந்நிலையில் தற்போது சிரியா நாட்டின் தலைநகரான டெமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் சிரிய அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத், அதிபர் மாளிகையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைந்தது போல, சிரியாவிலும் கிளர்ச்சியாளர்களின் ஆட்சி விரைவில் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments