Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய்: கோத்தபயவை கடிந்த ராஜபக்சே

நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய்: கோத்தபயவை கடிந்த ராஜபக்சே
, புதன், 14 ஜனவரி 2015 (19:21 IST)
என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய், என தனது சகோதரர் கோத்தபயவிடம், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சீறியுள்ள சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்து விரட்டப்பட்டுள்ள ராஜபக்சே கடும் விரக்தியில் உள்ளார். தோல்விக்குப் பிறகு தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்காக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராஜபக்சே நிலை குலைந்து போய் உள்ளார். குறிப்பாக விடுதலைப்புலிகளின் பல டன் தங்கத்தை அவர் அபகரித்து கொண்டதாக எழுந்துள்ள புகார் ராஜபக்சேயை கண்ணீர் விட வைத்துள்ளது.
 
இந்த நிலையில் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கோத்தபய, "என்னை வீட்டு காவலில் வைத்துள்ளனர். என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
 
இதையடுத்து ராஜபக்சேக்கும், கோத்தபயக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோத்தபயவிடம் கடும் கோபத்தில் எரிந்து விழுந்துள்ள ராஜபக்கே, ’என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய்’ என்று கோபத்தில் கத்தியுள்ளார்.
 
ராஜபக்சேவை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் சமரசம் செய்துள்ளார். அப்போது, அவரிடம் ராஜபக்சே, ’என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் மூன்று மகன்களின் நடத்தையாலும் அழிந்து விட்டது. எனக்கு வாய்த்த மகன்கள் இப்படி இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன்?’ என்று புலம்பியுள்ளார்.
 
மகன்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளால் அவர் மனம் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டிருப்பது அவருக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil