Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் தேர்தல்: புதின் அபார வெற்றி

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (08:13 IST)
ரஷ்ய அதிபர் புதினின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலையே வாக்குகள் எண்ண தொடங்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்த புதின், 76% வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தலில் புதின் பெற்ற வாக்குகளின் சதவீதம் 64  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அடுத்து அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார். ஏற்கனவே வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் புதின் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கருத்துக்கணிப்புகளின்படியே புதின் வெற்றியை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான அலக்சே நவால்னி வெறும் 12% வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேசெனியா சோப்சக், 2 சதீவீதத்திற்கும் குறைவான வாக்குகளையும், மூத்த தேசியவாதி விளாடிமிர் சிரினோஃப்ஸிகி 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையும் மட்டுமே பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments