Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹமாஸை ஒடுக்க காசா மீதான போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஹமாஸை ஒடுக்க காசா மீதான போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
, செவ்வாய், 29 ஜூலை 2014 (13:20 IST)
ஹமாஸ் போராளிகளை ஒடுக்க காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே பயங்கர தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீன பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினரும் இந்த சண்டையில் பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் 12 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது. 12 மணி நேரம் முடிந்ததும் மீண்டும் தாக்குதல் தொடங்கின. ஹமாஸ் போராளிகள் தாக்குதலில் 5 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 10 பேர் பலியானார்கள்.
 
இச்சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. முயற்சி செய்து வருகிறது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல்-ஹமாஸ் அமல்படுத்த வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தி வருகிறார்.
webdunia
Injured Palestine baby
ஆனால் காசா மீதான தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும்,  ஹமாஸ் போராளிகளை ஒடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும், தங்களின் குடிமக்கள், குழந்தைகள் மற்றும் வீரர்களை பாதுகாக்கவே ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil