Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி....அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:11 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் மீண்டும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்

இந்த நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் ஆகிய இருவரில் ஒருவர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ஒவ்வொரு தலைமுறைக்கும்  ஜனநாயகத்திற்கும் துணை நிற்கவேண்டிய தருணம் உள்ளது. தங்கள் அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்கும் நிலை இருக்கும். இது நம்முடையது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடக்கவுள்ளள தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டிரம்புக்கு இடையிலான போட்டி இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments