Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்புக் கூடுகளுடன் விமானப் பாகம் - மாயமான மலேசிய விமானமா?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (20:43 IST)
பிலிப்பைன்ஸில் எலும்புக் கூடுகளுடன் கிடந்த விமானத்தின் பகுதி மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 விமானத்தினுடைய பாகாமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
 

 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான விமானத்தினுடையது என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள தீவு ஒன்றில், 70 இன்ச் நீளமும், 35 இன்ச் அகலமும் கொண்ட மலேசிய நாட்டுக் கொடியுடன் கூடிய விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருந்துள்ளது.
 
காவல் துறையினர் இந்த தகவலை பாதுகாப்பாக வைத்துள்ளது. ஆனால், மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கக்கூடும் என்ற கருத்தையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

Show comments