பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவர்களின் பட்டியலில் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ டியூடெட்ரே போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக் கொல்ல பொதுமக்களை அனுமதிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக 160 பேரின் பெயர்களை அவர் வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் நீதிபதிகள், மேயர்கள், காவல் துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளன.