Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டைனோசர் காலத்தில் ராட்சத பென்குயின்: அதிர்ச்சி தகவல்!!

டைனோசர் காலத்தில் ராட்சத பென்குயின்: அதிர்ச்சி தகவல்!!
, சனி, 25 பிப்ரவரி 2017 (10:29 IST)
டைனோசர் வாழ்ந்த காலத்தில் பென்குயின்களும் வாழ்ந்தன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


 
 
அண்டார்க்டிக் கண்டம் மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட தென்துருவ நாடுகளில் வசிக்கும் பென்குயின் பறவைகள் பலரும் விரும்பக் கூடியவை. 
 
பென்குயின்கள், பூமியில் 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. டைனோசர் வாழ்ந்து வந்த அதே காலத்தில் பென்குயின்களும், ராட்சத வடிவில் தென்துருவப் பகுதிகளில் இருந்துள்ளன.
 
மேலும், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக, பூமி மீது விண்கல் மோதியபோது டைனோசர் விலங்குகளுடன், இந்த ராட்சத பென்குயின்களும் அழிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இதற்கான ஆதாரம், நியூஸிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. மதம் கொண்ட யானை; விஜயகாந்த் சினம் கொண்ட சிங்கம்: பிரேமலதா அதிரடி!