Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினாங்கு உலகத் தமிழ் மாநாடு: வைகோ மலேசியாவுக்குப் பயணம்

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2014 (15:08 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 'பினாங்கு‘ உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக மலேசியா செல்கிறார்.
 
பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஒருங்கிணைத்து நடத்துகின்ற 'பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டை’த் தொடங்கி வைத்து வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
 
மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் 7 ஆம் தேதி வெள்ளிக் கிழமை பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில் அரங்கில் நடைபெறுகின்றன. 08, 09 ஆகிய இரண்டு நாட்களிலும் பினாங்கு பே வியூ ஹோட்டலில் மாநாடு நடைபெறுகிறது. மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நிறைவுரை ஆற்றுகிறார்.
 
இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
 
மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் டைப்பிங், ஈப்போ, பட்டர் ஒவர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற பொதுக் கூட்டங்களில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
 
அதைத் தொடர்ந்து, 12 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்று அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments