Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரும்பாலனவர்களின் பாஸ்வேர்டு இது தான்: ஸ்பலாஷ் டேட்டா நிறுவனம் தகவல்

பெரும்பாலனவர்களின் பாஸ்வேர்டு இது தான்: ஸ்பலாஷ் டேட்டா நிறுவனம் தகவல்

Caston

, வியாழன், 21 ஜனவரி 2016 (19:12 IST)
ஸ்பலாஷ் டேட்டா என்ற இணையவழி பாதுகாப்பு நிறுவனம் 2011 முதல் 2015 வரை மேற்கொண்ட ஆய்வில் உலகில் இணையத்தை பயன்படுத்துவோரில் அதிகமானோர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு என்னென்ன என்பதை வெளியிட்டது.


 
 
இதில் 123456 மற்றும் password என்பதையே அதிகமானோர் பாஸ்வேடாக பயன்படுத்துகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சில இணையதளங்கள் 8 எழுத்துக்குமேல் பாஸ்வேடு இருக்க வேண்டும் என கூறும் போது 12345678 என்பதையே அதிகமானோர் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர்.
 
மேலும் அந்த ஆய்வில் எந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
 
கீ போர்டின் மேலிருந்து கீழ் வரிசையில் உள்ள 1qaz2wsx மற்றும் நேர் வரிசையில் உள்ள qwertyuiop என்ற எழுத்துக்களையும் பலர் பாஸ்வேடுகளாக பயன்படுத்துகின்றனர்.
 
இவற்றை ஹேக்கர்கள் எளிதில் கைப்பற்றி விடுகின்றனர். பாஸ்வேர்டு திருடப்படுவதை தடுக்க பல இனையதளங்கள் விரல் ரேகை, கருவிழி படலங்களை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil