Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போருக்கான வியூகத்தை வகுத்து விட்டோம் : பாகிஸ்தான் விமான படை தளபதி கொக்கரிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (17:18 IST)
இந்தியாவின் எச்சரிக்கை கண்டு பாகிஸ்தான் பயப்படாது. போருக்கான வியூகத்தை வகுத்து விட்டோம் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி மார்ஷால் சோகில் அமான் கூறியுள்ளார்.


 

 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.  அந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களது 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. ‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. இது பாகிஸ்தான் ராணுவத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பேசிய ஒரு விழாவில் பேசிய மார்ஷால் சோகில் அமான் “ இந்தியாவின் எச்சரிக்கைக்கு ஒரு போதும் கவலைப்பட மாட்டோம். பாகிஸ்தான் ராணுவத்தினால சரியான பதிலடி கொடுக்க முடியும். காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது இந்தியாவிற்கு நல்லது. பாகிஸ்தான் போரை விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற அழுத்தத்தை புறக்கணிக்க முடியாது.
 
உரி தாக்குதலை அடுத்து, இந்தியாவிடம் இருந்து  எச்சரிக்கை எழுந்து வரும் நிலையில் போருக்கான அனைத்து வியூகங்களையும் நான் வகுத்து விட்டேன். அதற்கான ஆபரேஷனில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments