Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடும் இந்தியா’: பாகிஸ்தான் ராணுவத் தளபதி காட்டம்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (11:30 IST)
பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகக் அந்நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் குற்றம் சாட்டி உள்ளார். 

 
பாகிஸ்தான் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹீல் ஷரீப், காஷ்மீருக்கு உள்ளாகவும் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி குறித்தும் தொடர்ச்சியாக கட்டுக்கதைகளை அவிழ்க்கும் இந்தியாவை பன்னாட்டுச் சமூகம் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மேலும், தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவகைத் தாக்குதல் மற்றும் தந்திரமான கணக்கிடுதல்கள்களை பாகிஸ்தான் போதும் தண்டிக்காமல் போய் விடாது என்று எச்சரித்துள்ளார். 
 
எனவே திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்படும் ஆக்ரோஷம், அல்லது தவறான ஆக்ரோஷப் பிரயோகம் தண்டிக்காமல் விடாது என்றும் கூறினார். இப்பகுதியில் அமைதியை தகர்த்தும் விதத்தில் ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றியடையாது, தீய திட்டங்கள் முறியடிக்கப்படும் என்றும் மற்றும் வெளிப்புற சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம் என்றார்.
 
உள்நாட்டு நிலவரங்களைப் பொறுத்தவரையில் ஸார்ப்-இ-ஆஸ்ப் என்ற நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments