Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானுக்கு ஷு தாயாரித்த பாகிஸ்தான் ரசிகர் கைது

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (16:20 IST)
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெஷாவரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரசிகர், அவருக்காக மான் தோலில் ஷு தயாரித்ததால் கைது செய்யப்பட்டார்.


 

 
பாகிஸ்தான் உள்ள பெஷாவரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உறவினர் உள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ்பெற்ற பெஷாவர் ஷுவை பரிசளிக்க முடிவு செய்தார்.
 
அதற்காக ஷு தயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரிடம் 2 ஜோடி ஷு தயாரித்து தரும்படி கேட்டுள்ளார். ஜகாங்கீர்கான் ஷாருக்கானின் தீவிர ரசிகர் என்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஷுவை மான் தோலில் செய்ய முடிவு செய்தார்.
 
இதை அறிந்த காவல்துறையினர் ஜகாங்கீர்கானின் தொழிற்சாலையை சோதனை செய்துள்ளனர். அப்போது மான் தோலில் தயாரிக்கப்பட்ட ஷு இருந்தது. அதை பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்தனர்.
 
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்பு முதலான பொருட்கள் செய்வது குற்றம் என்பதாலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments