Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

Siva
திங்கள், 5 மே 2025 (19:01 IST)
பாகிஸ்தான் வான்வெளி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்று உலகின் முக்கிய நாடுகளின் விமான நிறுவனங்கள் முடிவு எடுத்ததை அடுத்து பாகிஸ்தான்களை மட்டும் இன்றி ஆப்கானிஸ்தான் வான்வெளியையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டின் வழியாக செல்லும் விமானங்களுக்கு கட்டணம் விதித்த நிலையில் தற்போது அந்த கட்டணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக  சீனா உள்பட மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களை இந்தியா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வது ஆபத்து என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்து உள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா வழியாக அனைத்து நாடுகளின் விமானங்கள் செல்வதால் தற்போது இந்தியாவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

தண்ணீரை தடுத்து பாருங்க.. தக்க பாடம் கற்பிப்போம்! - இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

மேலும் 2 மெட்ரோ வழித்தடங்கள்.. மெட்ரோ நகரமாகும் சென்னை..!

அடுத்த கட்டுரையில்
Show comments