Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் டியூப் குழந்தைக்கு பாகிஸ்தான் பச்சை கொடி

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (21:52 IST)
டெஸ்ட் டியூப் குழந்தைகள் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அனுமது வழங்கியுள்ளது.


 

 
கருத்தரிக்க வாய்ப்பில்லாத தம்பதியரில் கணவரது விந்தணுக்களையும், மனைவியின் கருமுட்டையையும் சோதனை குழாய் மூலம் இணைத்து, கருத்தரிக்க வைத்து, வளர்ச்சிபெற்ற கருவினை அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தைப்பெற சாத்திய சூழலை உருவாக்கும் முறைதான் டெஸ்ட் டியூப்.
 
இந்த முறை உலக நாடுகளில் வேகு காலத்திற்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்டது. இஸ்லாமிய மத கோட்பாடுகளை சட்டமாக பின்பற்றும் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இதுபோன்ற சோதனை குழாய் குழந்தைகளை பெற்றுகொள்ளுவது சட்டவிரோதமானது.
 
நீண்ட காலம் இதுகுறித்து ஆலோசனையில் இருந்த பாகிஸ்தான் நாட்டில் தற்போது டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் டியூப் முறை வாடகை தாயை போன்றது இல்லை, தாயின் கடுவிலே செலுத்தக்கூடியது தான். அதனால் இது இஸ்லாமிய நன்முறைகளுக்கு எதிரானது அல்ல, என பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments