Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டன் வாழ் பாகிஸ்தானியருக்கு 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:10 IST)
பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக லண்டன் வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அல்தாப் ஹூசைன்  லண்டனில் வசித்து வருகிறார். அங்கிருந்த படியே அவர்   முத்திஹிடா உவாமி என்ற அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.
 
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய அல்தாஃப் ஜம்முவில் வசிக்கும் மக்களை இந்திய ராணுவம் எப்படி நடத்துகிறதோ,  அதுபோல கராச்சியில் வசிக்கும் மக்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
 
அல்தாஃபின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அல்தாஃபுக்கு எதிராக தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அல்தாஃப்புக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அல்தாஃபை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் காவல்துறைக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

Show comments