Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 ஆண்டுகளில் 103 பத்திரிக்கையாளர்கள் படுகொலை

15 ஆண்டுகளில் 103 பத்திரிக்கையாளர்கள் படுகொலை
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (13:53 IST)
மெக்சிகோவில் கடந்த 15 ஆண்டுகளில் 103 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
 

 
கடந்த 15 ஆண்டுகளில் 103 பத்திரிகையாளர்கள் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று அந்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ரூபன் எஸ்பினோசோவின் கொலையும் இதில் ஒன்றாகும்.
 
அந்த அறிக்கை 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் 25 பத்திரிகையாளர்களைக் காணவில்லை என்றும், அவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
 
2010இல் டுவார்டே ஆட்சிக்கு வந்தபோது 14 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தின் போது, ஐந்து பத்திரிக்கையாளர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும், டுவார்டே ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகவியல் தொடர்பான மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்த புள்ளி விவரம் தகவல் தெரிவித்துள்ளது.
 
பத்திரிக்கையாளர்களுக்கு அபாயகரமான நாடுகள் பட்டியலில் மெக்சிகோ இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஈராக் உள்ளது. சிரியாவில் 75 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதை விடவும் மோசமாக மெக்சிகோ நடந்துகொள்வதாகவும் அது கூறியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil