திமுகவின் ‘பி’ டீம் தான் ஓபிஎஸ், தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (14:21 IST)
திமுகவின் ‘பி’ டீம் தான் ஓபிஎஸ் என்றும் அவரை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவ்வப்போது இது குறித்து காரசாரமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்
 
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜூலை 11ம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடைபெறும் என்றும் சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப முடியாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் திமுகவின் ‘பி’ டீம் போல் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றும் கட்சியை முடக்கும் அவரது செயலை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கட்சிக்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments