Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

Siva
செவ்வாய், 13 மே 2025 (16:56 IST)
காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற  நடவடிக்கையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
இந்த தீவிரவாதிகளின் உடல்கள் பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில், தேசியக் கொடியால் மூடி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறை மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வரை கலந்து கொண்டனர். அவர்களில் லெப்டினன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் உட்பட, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
இறுதி சடங்கில், சர்வதேச நாடுகளால் தேடப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் ரவூப் நேரில் வழிநடத்தியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பங்கேற்பு பாகிஸ்தான் அரசு மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு இடையேயான தொடர்பை வெளிக்கொணர்ந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
 
இந்த சம்பவம், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு நெருக்கமாக செயல்படுவதை உலகிற்கு காட்டியதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் விளக்கமளித்தபோது, ‘ஹபீஸ் அப்துல் ரவூப் தீவிரவாதி அல்ல, அவர் ஒரு சாதாரண நபர், அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" கூறினர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments