Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணியின் மெய்க்காப்பாளரை சீண்டிய சுற்றுலா பயணி: வீடியோ இணைப்பு

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (09:53 IST)
இங்கிலாந்து அரசக் குடும்ப மெய்க்காப்பாளரை சீண்டிய சுற்றுலாப் பயணி ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.


 
 
இங்கிலாந்தின்  பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அரசு குடும்பத்துக்கு சொந்தமான மெய்க்காவல்  படை பாதுகாப்பை வழங்கி வருகிறது.
 
பணி முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறும் மெய்க்காவல் படை நிகழ்த்தும் அணிவகுப்பை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பர். அந்த வகையில் நேற்று ஒரு மெய்க்காப்பாளர் அரண்மனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது அங்குவந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மெய்க்காப்பாளரை போல நடந்து செல்வது என அவரை தொடர்ந்து பின்சென்றார்.
 
ஒரு கட்டத்தில் மெய்க்காப்பாளரது தோலில் சுற்றுப்பயணி கைவைக்க, ஆவேசமடைந்த அந்த வீரர் தான் கையில் வைத்திருந்த தானியங்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சுற்றுலா பயணி பின்னங்கால் பிடறியில் அடித்த படி தலைதெறிக்க ஓடினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Show comments