Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கை சுனாமி உருவாக்கிய வடகொரியா! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:09 IST)
சமீப காலமாக ஏவுகணை சோதனை மூலம் பீதியை கிளப்பி வந்த வடகொரியா தற்போது வெற்றிகரமாக செயற்கை சுனாமியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த பல காலமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகப்படுத்தியுள்ளது. அவ்வாறாக சோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் சில தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் ஆயுதம் ஒன்றை ட்ரோன் மூலமாக செலுத்தி செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தி வெற்றிக் கண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அணு ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயற்கை சுனாமி சோதனை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments