Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் விழுந்த வடகொரியாவின் ஏவுகணை! – பீதியில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (11:06 IST)
வடகொரியா சோதித்த ஏவுகணை ஜப்பானில் சென்று விழுந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபமாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிஸ் ஏவுகணை சோதனையில் மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு அவ்வாறாக வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பானின் கடல் பகுதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை மீறிய சோதனையை வடகொரியா செய்துள்ளது.

தென்கொரிய ராணுவத்தின் தகவலின்படி, காலை 5.21 மணி அளவில் ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து காலை 6.27 மணி அளவில் ஜப்பானின் ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா தீவு அருகே விழுந்துள்ளது. கிட்டத்தட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக முடித்திருப்பது அண்டை நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments