Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1953 ஆம் ஆண்டுக்கு பின் இணைந்த இரு துருவங்கள்....

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:34 IST)
கொரியப்போர் கடந்த 1953 ஆம் ஆண்டு முடிந்த பின்னர் வட கொரியாவிற்கு தென் கொரியாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வந்தது. த்ற்போது இரு துருவங்களும் இணைந்துள்ளது. 

 
 
இரு கொரிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், வடகொரியா நடத்தி வந்த தொடர் ஆணு ஆயுத சோதனை இந்த மோதல் போக்கை அதிகரிக்க செய்தது. ஆனால், தென் கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தின. 
 
வடகொரியா இறங்கி வந்தது. தென் கொரியாவும் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முன்வந்தது. இதையடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். 
 
தற்போது, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்து பேச வடகொரிய தலைவர் தென்கொரியா சென்றுள்ளார். 
 
திட்டமிட்டபடி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது. 
 
கொரிய போருக்கு பின்னர் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments