பிரச்சனைய பெரிசு பண்ணாதீங்க: சீனா கெஞ்சல்??

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (15:41 IST)
லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சீனா கோரியுள்ளது. 
 
நேற்றிரவு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா துருப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை கூறியபோது, ‘இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
 
அதோடு சீனா ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளது, அதில் லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் இந்தியா பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என கோரியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments