Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணமே கிடைக்கல.. பாபநாசம் பட ஸ்டைலில் நடந்த கொலை! - மனைவியை கொன்ற கணவன் சிக்கியது எப்படி?

Prasanth Karthick
புதன், 4 டிசம்பர் 2024 (10:25 IST)

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் தனது மனைவியை கொன்று பிணமே கிடைக்காமல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மனஸ்சாஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் பட். இவரது மனைவி மம்தா காப்லே பட். நரேஷ் பட் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாத இறுதி வாக்கில் மம்தா காப்லே காணாமல் போயுள்ளார்.

 

ஆனால் அதை பற்றி நரேஷ் போலீஸில் புகார் அளிக்காமல் சகஜமாகவே இருந்துள்ளார். ஆனால் மம்தா பல நாட்களாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராததால் அவர் பணிபுரிந்த மருத்துவ நிறுவனம்தான் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் நரேஷிடம் விசாரித்ததில் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற உள்ளதாகவும், அதனால் பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் மம்தா காணமல் போவதற்கு முன்பும், பின்பும் நரேஷின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் இருந்துள்ளதை போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மம்தா மாயமாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நரேஷ் தனது ஃபோனில் இரண்டாம் திருமணம் செய்வது குறித்து தேடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மனைவி இறந்தால் அவர் கட்ட வேண்டிய கடன் என்னவாகும்? போன்ற கேள்விகளையும் தேடியுள்ளார்.
 

ALSO READ: ஆந்திரா-தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்: சாலையில் அச்சத்துடன் பொதுமக்கள்..!
 

மம்தா காணாமல் போவதற்கு சில நாட்கள் முன்னதாக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பல வகை கத்திகளை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நரேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். மம்தாவின் பிணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மம்தாவின் ரத்தத்தின் மரபணு மாதிரிகள் நரேஷின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்ந்து நரேஷிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

மம்தாவை கொன்று துண்டுகளாக வெட்டி நரேஷ் அப்புறப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் மம்தா உயிருடன் இருப்பதாகவே தொடர்ந்து நரேஷ் கூறி வருகிறார். மம்தாவின் பிணம் என எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை! மாணவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கிய கோலாகல விழா!

சபரிமலையில் வெயில்.. மீண்டும் திரும்பியது இயல்பு நிலை.. குவியும் தமிழக பக்தர்கள்..!

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் பத்திரம் வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி..!

தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த அதிபர்.. மக்கள் சக்தியால் சில மணி நேரங்களில் வாபஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments