பூஸ்டர் தடுப்பூசி போட்டால் 100 டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (09:01 IST)
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மேயர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கமோ ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலானோர் 2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தினால் மட்டுமே ஒமிகிரான் வைரஸில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது. 
 
இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பு ஊசி போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பூஸ்டர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூஸ்டர் தடுப்பு ஊசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவும் நியூயார்க் மேயர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். 
 
இதன்படி நியூயார்க் நகரில் உள்ள பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் பூஸ்டர் தடுப்பு ஊசி போட முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments