Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன வருசம் செத்தவங்கள இன்னுமா புதைக்கல? – குளிர்சாதன பெட்டியில் கொரோனா நோயாளிகள்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:51 IST)
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்படாமல் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதியில் கொரோனா பரவ தொடங்கிய நிலையில் இதுவரை உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவியதால் தினசரி 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இதில் அமெரிக்காவின் முக்கிய வணிக நகரமான நியூயார்க்கும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த பலரது உடல்கள் இதுநாள் வரையிலும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நியூயார்க் போலீஸார் “இறந்தவர்களின் உடல்களை உடனடியாக புதைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் அவர்களது உடல்கள் குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவை ஹார்ட் தீவில் புதைக்கப்படவோ அல்லது வேறு இடங்களில் புதைக்க விரும்பினாலோ நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளனர். மொத்தமாக 750 கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல் இவ்வாறாக பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments