Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (11:01 IST)
இமயமலையிலுள்ள அன்னபூர்ணா மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இமயமலை பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபடுவர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அன்னபூர்ணா மலைப்பகுதியில் திடீரென பனிப்புயல் ஏற்பட்டது.
 
இதில் பனிப்பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டதில் அதில் சிக்கி 30 பேர் பலியாகினர். இதில் 4 இந்தியர்களும் அடங்குவர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் காவல்துறையும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதில் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், சில சடலங்கள் கிடைத்திருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 50 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments