Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்திற்கு மேல் நாசாவின் ஹெலிகாப்டர்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (13:42 IST)
செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய நிலையில் அடுத்ததாக ஹெலிகாப்டர் பறக்கவிடப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் நிலையில் சமீபத்தில் செவ்வாயின் மேற்பரப்புகளை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. சமீபத்தில் வெற்றிகரமாக பெரசவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதுடன் புகைப்படத்தையும் அனுப்பியது.

இந்நிலையில் ரோவருடன் அனுப்பப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரான இன்ஜெனூட்டியை விரைவில் ஆக்டிவேட் செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் முதன்முறையாக விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்திலிருந்து ஒரு துணி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8ம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டு செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் பறக்கவிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments