Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் சூப்பர் நிலவு!!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (10:57 IST)
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.


 
 
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவு வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பது தான் ‘சூப்பர் நிலவு’. இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
பூமியில் இருந்து சுமார் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும்.
 
அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.
 
கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் நாளை மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments