Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் ஒபாமா

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (11:40 IST)
நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ஒபாமா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக அந்நாட்டு அமைச்சர் வில்லியம் பேன்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அமைச்சர் வில்லியம் பேன்ஸ் டெல்லி வந்துள்ளார். அவர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, வெயிளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களடம் பேசிய வில்லியம் பேன்ஸ் பிரதமர் நரேந்தி மோடி செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

மோடியின் வருகை இருநாட்டு உறவுகளை பலப்படுத்த கிடைத்த சிறப்பான வாய்ப்பு என்றும் தெரிவித்தார். மோடி அரசு இந்தியாவை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும் என்று கூறிய வில்லியம் பேன்ஸ் அதற்கு அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

தொழில், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Show comments