Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரழகி கிளியோபாட்ராவின் மரணம்: மர்ம முடிச்சுகளின் பிணைப்பில்...

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (12:13 IST)
எகிப்த் நாட்டின் பேரழகி கிளியோபாட்ரா. அவளது அழகை கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. ஆனால் அவரது மரணம் மர்மாகவே ஊள்ளது.


 
 
தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். எகிப்து மக்களும் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
 
கிளியோபாட்ராவிற்கு 14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின்னர் தனது 18 வது வயதில் அரசியானாள். 
 
அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது என்பதால், தனது தம்பி 13 ஆம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள்.
 
நாட்டையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க ரோம் நாட்டின் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள் கிளியோபாட்ரா. சீசரை தனது காதல் வலையில் வீழ்த்தினாள்.
 
பின்னர், தனது காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. சீசர் கொல்லப்பட்டார். 
 
ஆபத்தை உணர்ந்த கிளியோபாட்ரா, அங்கிருந்து எகிப்துக்கு தப்பினாள். பின்னர், ஆட்சியை காப்பாற்ற ரோம பேரரசின் தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். 
 
அதே நேரத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கொன்று எகிப்து அரசுக்கு அவளை தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.
 
சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இந்த போரில் தளபதி ஆன்டனி தோற்று தற்கொலை செய்து கொண்டார். 
 
கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர். இதன் பின்னர்தான் கிளியோபாட்ராவின் மரண நிகழ்வும் நடந்தது. அவளது மரணம் இன்றுவரை விளக்கப்படாத மர்மாகவே உள்ளது.
 
அவளது மர்மத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. சிறையில் இருந்து தப்பிய போது எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 
 
அந்தகாலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தி மரணமைடைந்தால் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால், இன்றுவரை அவளது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

அடுத்த கட்டுரையில்
Show comments