Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்கு ’மணமகன் தேவை’ விளம்பரம் கொடுத்த தாய்

Webdunia
வியாழன், 21 மே 2015 (20:04 IST)
மும்பையில் தாய் ஒருவர் தனது மகனுக்கு மணமகளுக்கு பதிலாக, மணமகன் தேவை என்று பத்திரிக்கை ஒன்றிற்கு விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் பத்திரிகையில் ஒன்றில் பத்மா ஐயர் என்ற பெண் தனது மகன் ஹரிஷ் (36) என்பவருக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், ’25 வயது முதல் 40 வயது வரை உள்ள நல்ல வேலையில் இருக்கும், விலங்குகள் மீது அன்பு கொண்ட ஆண் தேவை. ஜாதி தடையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 
இந்த விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமாக கருதப்பட்டுவரும் இந்த வேளையில் இதுபோன்ற விளம்பரத்தை கொடுத்ததற்கு எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.
 
இது குறித்து விளம்பரம் செய்த பத்மா, “எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கு முன்னதாக எனது மகனுக்கு ஒரு துணையை கண்டுபிடிக்க விரும்பினேன். அதுவும் ஆண் துணையை” என்று கூறியுள்ளார்.
 
ஹரிஷ் அய்யர் கூறுகையில், "நான் என் திருமணம் ஒரு சைவ விழாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், சிறந்த பழக்கவழக்கங்களை உடைய அனைத்து மதங்களும், ஜாதிகளும் கலந்த வகையில் செய்வேன்” என்றார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments