Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை: திணறும் அமெரிக்கா

Webdunia
புதன், 27 மே 2020 (07:45 IST)
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்துவந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை குறையாததால் அமெரிக்க அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் திணறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,549 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1027 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி பிரேசில் நாட்டை கொரோனா எந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பது தெரிகிறது
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  56,78,026 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 17,25,275பேர் அமெரிக்கர்கள் என்பதும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,51,668 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 24,26,560 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

எந்த வேலையையும் நிறுத்தக் கூடாது! அப்பல்லோவில் இருந்தபடியே ஆலோசனை செய்யும் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments