Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு பாதிப்பா? புதிய வகை கொரோனாவால் பிரிட்டன் அதிர்ச்சி!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (07:42 IST)
ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு பாதிப்பா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 8 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் அதில் சுமார் இரண்டு கோடி பேருக்கு அமெரிக்காவில் மட்டுமே பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதை அடுத்து பிரிட்டன், உலக நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிற்து. அந்நாட்டில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதி இல்லை என்றும் பிரிட்டனுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பிரிட்டனில் 36 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் பிரிட்டனில் 691 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலி எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் பிரிட்டனில் அதிகரித்து வருவதற்கு புதிய வகை கொரோனா தான் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதுவரை பிரிட்டனில் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர திட்டமிட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது பயணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க தங்கள் நாட்டிலிருந்து இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் இந்திய பயணத்தை அவர் ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments