சென்னை உள்பட உலகம் முழுவதும் தெரிந்தது சந்திரகிரகணம்

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (23:00 IST)
வான்வெளியில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழலில் சந்திரன் மறையும் நிகழ்வே சந்திரகிரகணமாகும். இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 10.53க்கு தொடங்கும் என்று ஏற்கனவே வானவியலார்கள் அறிவித்திருந்தனர்.



 
 
அந்த வகையில் சற்று முன்னர் சந்திரகிரகணம் தொடங்கியது. இந்த சந்திரகிரகணம் சென்னையிலும் சரியாக இரவு 10.52 மணிக்கு தெரிந்தது. இந்த இரவு நேரத்திலும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இதே போன்று ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் சந்திரகிரகணம் தெளிவாக தெரிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12.48க்கு முழுமையாக முடிகின்றது. சந்திர கிரகணத்தை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் வேணுமா?.. இந்த 2 விஷயத்தை பண்ணுங்க.. இனிமே அமெரிக்கா உதவி கிடைக்காது!.. டிரம்ப் ஐடியா!

தவெக கூட்டத்தில் கண்ணாடி பாட்டில் வீச்சு!.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்.. இருவர் கைது!...

திடீர்னு வறார்.. பேசுறார்.. போயிடுறார்!.. திமுகவின் B டீம் விஜய்!.. எஸ்.பி.வேலுமணி நக்கல்!..

வெர்சே இன்னோவேஷன் இயக்குனர், தணிக்கு குழு தலைவராக பி.ஆர்.ரமேஷ் நியமனம்!..

திருச்சியில் பிரச்சாரம்!.. ரோட் ஷூட் நடத்தக்கூடாது!... விஜய்க்கு போலீசார் கெடுபிடி..

அடுத்த கட்டுரையில்
Show comments