Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதியில் கால் பந்தாட்ட வலையில் சிக்கி உயிரிழந்த மனித குரங்கு

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (14:08 IST)
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கால் பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து இலக்கு வலையில் மனித குரங்கு ஒன்றின் கழுத்து சிக்கியது. கால்பந்து வீரர்கள் குரங்கை மீட்க தீவிர முயற்சி செய்தனர் ஆனால் குரங்கின் கழுத்து  மிக மோசமாக அந்த வலையில் மாட்டிக்கொண்டதால் அது பரிதாபமாக உயிரிழந்தது. தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் இந்த சம்பவம் நடந்தது. மனித வீரர்கள் யாரும் இல்லாத நேரத்தில் குரங்குகள் விளையாட சென்றதால் இந்த துயரம் நடந்துள்ளது.

அருகிலுள்ள மலையிலிருந்து வரும் இந்த குரங்குகள் வீரர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்கள் இல்லாத நேரங்களில் கால் பந்தாட்ட வலையில் குதித்து, தாவி விளையாடுவதை தான் பல முறை பார்த்துள்ளதாக சதா என்பவர் தெரிவித்தார். சம்பவம் நடந்த அன்று இந்த குரங்குகள் வலை அருகே விளையாடியிருக்கும் இதனால் அந்த குரங்கின் கழுத்து வலையில் மாட்டி இறந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Show comments