Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஒரு ஓட்டு வாங்காத பிரதமர் மோடி! அதிர்ச்சி தகவல்

ஒரே ஒரு ஓட்டு வாங்காத பிரதமர் மோடி! அதிர்ச்சி தகவல்
, புதன், 19 ஏப்ரல் 2017 (07:00 IST)
அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘டைம்ஸ்’ பத்திரிகை தனது வாசகர்கள் மூலம் உலகின் பிரபலங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பிரபலங்கள் பட்டியலை கடந்த சில நாட்களாக தயாரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரே ஒரு ஓட்டு கூட வாங்காமல் இந்த பட்டியலிலே இந்திய பிரதமர் மோடி இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.



 


ஆன்லைன் மூலம் வாக்களித்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒருவர் கூட பிரதமர் மோடிக்கு வாக்களிக்கவில்லை. உலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் முதலிடம் பிடித்துள்ளார். போதை பொருள் ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவரது ஆட்சியில் போதை கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என 8 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரத்துக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதால் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.

கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ, போப் ஆண்டவர் பிரான்சிஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க்‌ஷுகர் பெர்க் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடியை போலவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சகன் நேதன் பாரு, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் டீன் ஸ்பெசர், டிரம்பின்மாள் இவாங்கா அவரது கணவர் ஜாரட்குஷ்னர் ஆகியோருக்கும் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை போலீசார் இனி 6 மணிக்கே டூட்டிக்கு வரவேண்டும்: கமிஷனரின் புதிய உத்தரவு