Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாயமான மலேசிய விமானம்: 58 பொருட்கள் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

மாயமான மலேசிய விமானம்: 58 பொருட்கள் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிப்பு
, திங்கள், 15 செப்டம்பர் 2014 (09:41 IST)
மாயமான MH370 மலேசிய விமானத்தைத் தேடும் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது.

நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

கடலில் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்தப் பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக ஆஸ்திரேலியா போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப் பட்டுள்ள 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனபதினாலே இந்தப் பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பர்கோ டிஸ்கவரி ஷிப் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கு உதவியாக மலேசியாவின் கோ பீனிக்ஸ் என்ற கப்பலும் தேடுதல் வேட்டைக்குச் செல்கிறது. மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் இதுவரை ஆய்வு செய்யாத ஆழ்கடல் பகுதிகளை ஆஸ்திரேலிய தேடுதல் அணி ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil