Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் வெடித்த வன்முறை

அமெரிக்காவில் வெடித்த வன்முறை
, புதன், 26 நவம்பர் 2014 (02:03 IST)
அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நீதிமன்ற நடுவர்கள் குழு ( ஜூரி) கடந்த ஆகஸ்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பதின்பருவ இளைஞன் மைக்கேல் ப்ரவுனை சுட்ட வெள்ளையின போலிஸ்காரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதில்லை என்று எடுத்த முடிவுக்கு எதிராக அம்மாநிலத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
 
ஃபெர்கூசன் புறநகர்ப் பகுதியில் ஒரு மிக மோசமான வன்முறை இரவு முழுவதும் நடந்ததாக செண்ட்.லூயிஸ் நகரப் போலிஸ் தலைமை அதிகாரி ஜான் பெல்மார் கூறினார்.
 
எதிர்ப்பாளர்களிடமிருந்து போலிசார் கடுமையான துப்பாக்கிச்சூடுகளை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
 
குறைந்தது 29 பேர்கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடைகள் சூறையாடப்பட்டு கட்டிடங்களுக்குத் தீவைக்கப்பட்டது.
 
இரவு முழுவது தீவைப்பு சம்பவங்களில் ஏற்பட்ட தீ எரிந்துகொண்டிருந்தது.
பாதுகாப்புப் படையினர் வீதிகளைல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அவர்கள் முன்னதாக கண்ணீர்ப்புகை குண்டுகளையும் புகையைப் பரப்பும் கேனிஸ்டர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள்.
 
அமைதி காக்கக் கோருகிறார் ஒபாமா
 
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டி வழக்கு பதியவேண்டியதில்லை என்ற முடிவு குறித்து தாங்கள் ஆழ்ந்த ஏமாற்றம் அடைவதாக மைக்கேல் ப்ரவுனின் குடும்பத்தினர் கூறினர்.
 
இந்த முடிவு குறித்து அமெரிக்கர்கள் சிலர் கோபப்படுவது புரிந்துகொள்ளக்கூடியதே , ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ், பிலடெல்பியா, நியூயார்க் போன்ற பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த முடிவுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர்.
 
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தினர்.
 
இந்த டாரன் வில்சன் என்ற போலிஸ் அதிகாரி தற்காப்பு நடவடிக்கையில்தான் இது போல நடந்து கொண்டார் என்று முடிவெடுத்த ஜூரிகள் குழு அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதில்லை என்று முடிவு செய்தது.
 
நேரில் கண்டவர்கள் சிலரின் வாக்குமூலங்களிலிருந்து , கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்டும் ஆதாரங்கள் முரண்பட்டன என்று செண்ட் லூயிஸ் அரசு வழக்குரைஞர் , பாப் ம்க்கல்லோக் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil