Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரோகம் செய்யும் பெண்களை முகம் பார்த்தே அறியும் ஆண்கள் : ஆய்வில் தகவல்

துரோகம் செய்யும் பெண்களை முகம் பார்த்தே அறியும் ஆண்கள் : ஆய்வில் தகவல்
, செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (21:26 IST)
துரோகம் செய்யும் ஏமாற்றுப் பெண்களை அவர்களின் முகம் பார்த்தே கண்டறியும் திறமை ஆண்களுக்கு உண்டு என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


 
பொதுவாக, பெண்கள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், துரோகம் செய்துவிட்டதாகவும், அவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் புலம்புவதைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.  ஆனால், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு இதற்கு நேர் எதிரான முடிவை தந்திருக்கிறது.
 
சமீபத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம் முகத்தை மட்டும் கொண்ட இரண்டு பெண்களின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டது. அதில், ஒரு பெண் ஏற்கனவே ஆண்களை ஏமாற்றியவர், மற்றொருவர் மிகவும் நல்ல பெண். இதில் எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. அந்த பெண்களின் புகைபடங்களை சில வினாடிகள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டது.
 
ஆச்சரியப்படும் விதமாக பெரும்பாலானவர்கள் மிகச் சரியாக, எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்பதை கண்டுபிடித்து கூறிவிட்டனர். புகைப்படத்தில் இருக்கும் பெண்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை வைத்தே ஆண்கள் அவர்களை கண்டுபிடித்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அப்படியென்றால், பெண்கள் தங்களை காலம் காலமாக நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்கள் என்று ஆண்கள் புலம்புவதுதான் புரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil