Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடலின் தோல்களை ஜவ்வுபோல் இழுக்கும் அதிசய மனிதன்

உடலின் தோல்களை ஜவ்வுபோல் இழுக்கும் அதிசய மனிதன்
, வியாழன், 15 ஜனவரி 2015 (16:08 IST)
உடலின் தோலை ஜவ்வுபோல் இழுத்துக்காட்டும் மனிதரான கேரி துபாயில் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளை செய்யவுள்ளார். 
 

 
கேரி என்பவர் தனது உடலில் 'எலெர்ஸ்-டன்லஸ் சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை தோல் பாதிப்பால் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், அதனையே, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகளாவிய அளவில் சாதனை மனிதராக வலம் வருகின்றார்.
 
webdunia

 
அவர் தனது தோலை நினைத்தபடி ஜவ்வுபோல் இழுத்துக் காட்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். உடலின் அனைத்து பாகங்களின் தோலும் இவர் இழுத்த இழுப்புக்கு எலாஸ்ட்டிக் போல் விரிவடைவதால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.
 
webdunia

 
இந்நிலையில், வரும் 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும், பின்னர் அந்நாட்டில் உள்ள பல்வேறு மனமகிழ் மன்றங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் இவர் தனது சாகசங்களை செய்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil