Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை வேட்டையாடிய கரடி (வீடியோ)

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:12 IST)
தாய்லாந்து நாட்டில் உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை கரடி கொடூரமாக வேட்டையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 

 
தாய்லாந்து நாட்டில் பெத்ச்புன் மாகாணத்தில் உள்ள கோயில் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் கரடிக்கு அங்கு வருபவர்கள் உணவு கொடுப்பது வழக்கம். கரடி ஒரு கட்டிடத்தினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்த வாலிபர் ஒருவர் கயிற்றின் மூலம் உணவு கொடுக்க முயற்சித்துள்ளார்.
 
ஆனால் உணவை கொடுக்காமல் சற்று விளையாடி கரடியை சீண்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கரடி மதில் வழியாக அந்த வாலிபரை உள்ளே இழுத்துப் போட்டு வேட்டையாடியது. வெளியே நின்றவர்கள் அந்த வாலிபரை கரடியிடம் இருந்து காப்பாற்ற பல முயற்சிகளை செய்தனர். கரடி அந்த வாலிபரை கடித்து அது கூண்டிற்கு இழுந்து சென்றது. 
 
பின் கோயில் அதிகாரிகள் கரடியை கம்பால் அடித்து விரட்டி அந்த வாலிபரை காப்பாற்றினர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

நன்றி: DailyWorldNews
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments