Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை எதிர்க்கும் அளவுக்கு நாங்க பெரிய ஆள் இல்லை! – பல்டி அடித்த மலேசிய பிரதமர்!

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (18:21 IST)
மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க முடியாது என மலேசிய பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது. இந்நிலையில் அவரது பேச்சுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததுடன் இந்திய உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பாமாயில் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்தியா. மலேசிய பொருட்கள் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரும் வியாபார சந்தையாகும்.

இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள மலேசிய பிரதமர் எங்களை போன்ற சிறிய நாடு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க வழிகளை யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments