Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கிய இங்கிலாந்து இளவரசர்? – பரபரப்பு தகவல்!

charles
, ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:19 IST)
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட பிரபல பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2000களில் மிகவும் அச்சுறுத்தலாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார். முக்கியமாக அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பின்லேடனை குறிவைத்த அமெரிக்க ராணுவம் கடந்த 2011ம் ஆண்டில் பின்லேடனை சுட்டுக் கொன்றது.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 3.1 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்றுள்ளதாக லண்டன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ராஜ குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படும் என்பதால் பின்பு நன்கொடை பெறுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இளவரசர் சார்லஸ் தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா செய்த அதே தவரை எடப்பாடி பழனிசாமி செய்கிறார்: கேசி பழனிசாமி