நிரவ்மோடி ஜாமீன் மனு தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (21:17 IST)
வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ்மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது
 
நிரவ்மோடிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என இந்திய அதிகாரிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பணபரிமாற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நீரவ்மோடி, இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. 
 
இந்த நிலையில் நீரவ் மோடி லண்டனில் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டு, 20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments