வயிற்றில் 122 முட்டைகள்... மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பு பிடிப்பட்டது!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (10:43 IST)
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மிகப்பெரிய மலைப்பாம்பை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். 

 
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் அதிக மலைப்பாம்புகள் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டு, இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி முட்டையிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுக்க திட்டமிட்டனர். 
 
இந்த நடவடிக்கையின் போது ஒரு பெண் மலைப்பாம்பு கண்டறியப்பட்டு அதனை பிடித்துள்ளனர். அந்த பெண் மலைப்பாம்பை பிடித்த பின்னர்  அதன் வயிற்றில் 122 முட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது 18 அடி நீளமும், 98 கிலோ எடையுடனும் இருந்துள்ளது. 
 
இந்த பெண் மலைப்பாம்பு இனப்பெருக்க காலத்தில் அதிகளவிலான முட்டைகளை உற்பத்தி செய்த மலைப்பாம்பு என்ற சாதனையை செய்திருக்கிறது. இது பர்மிய மலைப்பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?

ஏஐ ஆதிக்கம் அதிகரிப்பதால் விக்கிபீடியா தேடுதல் குறைந்ததா? அதிர்ச்சி தகவல்..!

தங்கம் விலை 2000 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைவு... சென்னை நிலவரம்..!

ஆர்.எஸ்.எஸ். அமைக்குக்கு தடை விதித்ததா கர்நாடக அரசு? முதல்வர் சித்தராமையா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments