சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:13 IST)
சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமத்தில்   இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 47 பேர் மண்ணுக்குள் புதைத்ததாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமம் உள்ளது. இங்கு,  இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 வீடுகளில் வசித்து வந்த  47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர்., நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments